விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் திடீர் மர்ம மரணம்- ஐடி ரெய்டில் சிக்கியவர்!
அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் ஐடி சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் சுப்பிரமணியம் திடீரென மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சர்ச்சைக்குரிய அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் இன்று திடீரென மர்மமாக மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் சுப்பிரமணியம் வீட்டில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இவை விஜயபாஸ்கருக்கு கடும் நெருக்கடியைத் தரக் கூடியவை என கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று சுப்பிரமணியம் திடீரென மர்மமான முறையில் அவரது தோட்டத்து பங்களாவில் இறந்து கிடந்தார். முதலில் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
ஆனால் மாரடைப்பால்தான் சுப்பிரமணியம் இறந்தார் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது சுப்பிரமணியம் உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியம் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications