ஊரே வெள்ளத்தால் நொந்து போய்க் கிடக்கும் நிலையில்... இவங்க போடுற சண்டையைப் பாருங்க
சென்னை: சென்னை நகர மக்கள் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில் காங்கிரஸ்காரர்களின் கோஷ்டி சண்டை வேறு மறுபக்கம் நாளுக்கு நாள் நாறிக் கொண்டே போகிறது.
காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், மகளிர் காங்கிரஸ் தலைவரான விஜயதாரணிக்கும் இடையேதான் சமீப காலமாக சண்டை நாறிப் போய்க் கொண்டிருக்கிறது. இளங்கோவனைப் பற்றி சரமாரியாக சமீபத்தில் புகார் கூறியிருந்தார் விஜயதாரணி. மேலும் விஜயதாரணி தரப்பும், இளங்கோவன் தரப்பும் மாறி மாறி போலீஸில் புகார் கொடுத்தது.

இந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியின் சென்னை வருகையை முன்வைத்து ஒரு புதுப் பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளார் விஜயதாரணி. ராகுல் காந்தி நேற்று புதுச்சேரி மற்றும் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
முடிச்சூர், மணிமங்கலம், வில்லிவாக்கம் பகுதிகளில் அவர் சேதப் பகுதிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் இரவில் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அங்குதான் பிரச்சினை ஏற்பட்டது. ராகுல் காந்தியை வழியனுப்பி வைக்க இளங்கோவன் தலைமையில் காங்கிரஸார் திரண்டிருந்தனர். ஆனால் விஜயதாரணியைக் காணவில்லை. ராகுல் காந்தி பயணத்தின்போது கூடவே இருந்தவர் விஜயதாரணி. இளங்கோவன் நிற்கும் இடமெல்லாம் பார்த்துப் பார்த்து அவரும் கூடவே போய் நின்று இளங்கோவன் தரப்பை கடுப்பேற்றிக் கொண்டிருந்தார். ஆனால் விமான நிலையத்தில் அவரைக் காணவில்லை.
இதுகுறித்து விஜயதாரணி கூறுகையில், என்னையும், சின்னாரெட்டியையும் ராகுல் வந்த முடிச்சூர் பகுதிக்கு பொறுப்பாளர்களாக நியமித்து இருந்தார்கள். அங்குள்ள பணிகளை முடித்ததும் ராகுலை வழியனுப்புவோர் பெயர் பட்டியலில் எனது பெயர் இருப்பதாகவும், எனவே விமான நிலையத்துக்கு வரும்படியும் அழைத்தார்.
அதன்பேரில் விமான நிலையம் சென்றேன். ஆனால் பெயர் பட்டியலில் இருந்து என பெயரையே நீக்கிவிட்டு பாசும் தரவில்லை. இது இளங்கோவனின் திட்டமிட்ட செயல். என்னைப்போல் கோபிநாத் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோரும் அனுமதிக்கப்படவில்லை. திட்டமிட்டு எங்களை அவமானப்படுத்தி விட்டார்கள்.
இதுபற்றி டெல்லி தலைமையிடம் புகார் செய்து அவர்களிடம் அனுமதி பெற்று சபாநாயகரிடம் புகார் தெரிவிக்க திட்டமிட்டுள்ளேன். ஒரு எம்.எல்.ஏ.வை விமான நிலையத்தில் அனுமதிக்காமல் இளங்கோவன் தூண்டுதலால் பிடித்து தள்ளியது உரிமையை பறிப்பதாகும் என்றார்.
இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் லட்டு லட்டா பிரச்சினைகள் சிக்குகிறதோ!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications