சினிமா பிரபலங்களால் கட்சி வளருமா?: குஷ்புவை மறைமுகமாக தாக்கும் விஜயதாரணி
நான் உட்பட காங்கிரஸ் கட்சிக்கு உழைத்தவர்கள் பலர் இருக்கிறோம். சினிமா பிரபலங்களால் தான் காங்கிரசின் செல்வாக்கு வளரும் என்று கருதுவது தவறு என்று எம்.எல்.ஏ விஜயதாரணி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக நடிகை குஷ்பு சில தினங்களுக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு அக்கட்சியின் எம்.எல்.ஏ விஜயதாரணி கருத்து கூறியுள்ளார்.

காங்கிரஸ் மேலிடம் குஷ்புவுக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்ததில் ஆச்சரியமில்லை. கட்சிக்கு வருபவர்களை கவுரவிக்கவும், தக்கவைக்கவும் கட்சி பதவி வழங்குவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் குஷ்புவுக்கு பதவி வழங்கியதில் தவறு இல்லை. அதே நேரத்தில் சினிமா பிரபலங்களால் தான் காங்கிரசின் செல்வாக்கு வளரும் என்று கருதுவதும் தவறு.
காங்கிரசுக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. அதை யாராலும் மறுத்து விட முடியாது. இருக்கிற செல்வாக்கை தட்டி எழுப்புகிற திறமை இருக்க வேண்டும்.
காங்கிரசுக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், தியாகம் செய்தவர்களும் பலர் இருக்கிறார்கள் அவர்களையும் கட்சி அங்கீகரிக்க வேண்டும். பதவிகள் வழங்க வேண்டும்.
நான் உள்பட பலருக்கு கட்சி பதவி கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்தான். எம்.எல்.ஏ. பதவி என்பது மக்களால் தேர்வு செய்யப்படும் பதவி ஆனால் கட்சி பணி செய்வதற்காக எந்த பதவியும் வழங்கியதில்லை.
தமிழகத்தில் காங்கிரசை முன்னணி கட்சியாக மீண்டும் கொண்டு வரமுடியும். திறமை, உழைப்பு மீது நம்பிக்கையோடு செயல்பட்டால் மக்களின் ஆதரவை பெற முடியும் என்று கூறியுள்ளார் விஜயதாரணி.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications