உங்கள் ஆட்சியில் இந்தியா வல்லரசாக மாறும் - பிரதமர் மோடிக்கு "பேரரசு" விஜயகாந்த் வாழ்த்து!
சென்னை: பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கடிதம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
நாளை பிரதமர் மோடி தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், அதற்குப் பதிலாக காஷ்மீர் வெள்ளத்திற்கு நிதியுதவி செய்யுங்கள் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், தமிழக பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த், மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க.வின் சார்பில் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இந்திய நாடு வல்லரசாக மாறுவதற்கு தங்களின் நிர்வாகத் திறமைமிகு தலைமையும், அரசை வழிநடத்தும் ஆற்றலும் காரணமாக அமையும் என்பதால் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், பூரண நலத்தையும் அருள மனப் பூர்வமாக வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications