விஜயகாந்த் 65: 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமை தமிழகமாக கொண்டாடும் தேமுதிக
சென்னை : வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வந்த விஜயகாந்த் பிறந்தநாள் இந்த ஆண்டு 'பசுமை தமிழகம்' என்ற பெயரில் தேமுதிகவினர் கொண்டாடப்பட உள்ளனர்.
கோயம்பேடு அலுவலகத்தில் தனது ராசிப்படி 5 மரக்கன்றுகனை நட்ட விஜயகாந்த் தமிழகம், புதுவையில் 2.5 லட்சம் மரக்கன்றுகளை நடப்போவதாக கூறினார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 65-வது பிறந்த நாளை ஆகஸ்ட் 25ம்தேதி கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு விஜயகாந்த் தனது பிறந்த நாளை பசுமை தமிழகம் என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகக்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. கட்சி அலுவலக வளாகத்தில் தனது ராசிப்படி 5 மரக்கன்றுகளை அவர் நட்டார்.
நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். ஆண்டுதோறும் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையை விஜயகாந்த் வழங்கி வருகிறார். இந்த ஆண்டுக்கான பிறந்தநாள் நன்கொடையை பள்ளி நிர்வாகிகளிடம் அவர் வழங்கினார்.
மரக்கன்று நடும் நிகழ்ச்சியின்போது பேசிய விஜயகாந்த் , எனது பிறந்த நாள் பசுமை தமிழகம் என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று கூறினார். பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். பசுமை தமிழகம் என்ற திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இன்று மரக்கன்றுகள் கட்சி அலுவலகத்தில் நடப்பட்டன என்றார்.

பத்திரிக்கையாளருக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது என்றும் விஜயகாந்த் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பிரேமலதா, எல்.கே.சுதிஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் பற்றி விமர்ச்சித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சினிமாவில் கூட விஜயகாந்த் மரக்கன்று நட்டதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது பிறந்தநாளை பசுமைத் தமிழகமாக கொண்டாடும் விஜயகாந்த், 2.5 லட்சம் மரக்கன்றுகளை நடப்போவதாக அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications