ஜல்லிக்கட்டு பிரச்சினையில் திமுகவும், அதிமுகவும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் - விஜயகாந்த் தாக்கு
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் நாடகமாடுவதாக விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஒரு பக்கம் திமுகவும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், மறுபக்கம் அதிமுகவும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாள் வரும் பொழுது அறிக்கைகள் மூலமாக நாடகம் ஆடி தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக இளைஞர்களின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் பல மாவட்டங்களில் பொங்கல் திருநாளன்று அனைவரும் ஒன்றுகூடி இந்த வீர விளையாட்டை காலங்காலமாக நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

முந்தைய திமுக துணையோடு ஆட்சி புரிந்த காங்கிரஸ் பிறப்பித்த ஆணையின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை ஆணைபிறக்கும் நிலை உருவானது. சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஆணையை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் இதற்கு தடைவிதிக்க மறுத்தது.
அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில் சரியான முறையில் அதிமுக அரசு தமிழகத்தின் நியாயங்களை சட்டரீதியாக எடுத்துரைக்காத காரணத்தால் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு பக்கம் திமுகவும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், மறுபக்கம் அதிமுகவும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாள் வரும் போது அறிக்கைகள் மூலமாக நாடகம் ஆடி தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு 2016 ல் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளித்து ஒரு சுற்றறிக்கை மூலம் ஆணை பிறப்பித்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த உத்தரவில் இந்த வீர விளையாட்டை நடத்துவதற்கு காரணங்கள் சொல்லப்படவில்லை என்றும், இன்றைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜல்லிக்கட்டு விளையாட்டை வரைமுறைப்படுத்தி காரணங்கள் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் உச்ச நீதிமன்றம் கேட்கின்ற நிபந்தனைக்கு ஏற்ப ஆணை பிறப்பித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, வரும் பொங்கல் திருநாளில் இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications