கேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலைகுலைந்து நிற்கும் கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அதிதீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு தே.மு.தி.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மன வேதனை
இதுதொடர்பாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேரள மக்கள் இயற்கையின் சீற்றத்தினாலும் வரலாறு காணாத கன மழையாலும் பெருமளவு பாதிக்கப்பட்டு அனைத்து பொருட்களையும் இழந்து நிற்பதை பார்க்கும்பொழுது மனம் வேதனை ஏற்படுகிறது.

உடனடி தேவை ரூ. 2 ஆயிரம் கோடி
கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் நிவாரண நிதியாக 8 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும், உடனடி தேவையாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

இரண்டாம் கட்டமாக ரூ.500 கோடி
முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் கேரளா மாநிலத்திற்கு நிவாரண நிதியாக அறிவித்த மத்திய அரசு, பின்பு ஹெலிக்காப்டர் மூலம் நேரடியாக சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திரமோடி வெள்ளத்தால் பாதித்த அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்த பின், கேரளா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதுடன், மத்திய அரசின் நிதியாக இரண்டாம் கட்டமாக 500 கோடி ரூபாய் அறிவித்தார்.
|
ரூ.1 கோடி அத்தியாவசியப் பொருட்கள்
கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அனைத்து மாவட்ட கழகங்கள் சார்பில் கேரள மக்களுக்கு ரூபாய் 1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் வரும் 24.08.2018 தேதியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications