சபாஷ், சட்டசபையில் சூப்பரா பேசினீங்க: தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கு பணமுடிப்பு வழங்கிய விஜயகாந்த்
சென்னை: சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது சிறப்பாக பேசிய தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை பாராட்டி அவர்களுக்கு தலா ரூ.1000 ரொக்கப் பரிசு வழங்கியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அதிமுக, தேமுதிக கூட்டணி உடைந்த பிறகு விஜயகாந்த் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். ஆனால் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி அவர்களின் செயல்பாட்டை கண்காணித்தும் வருகிறார் விஜயகாந்த்.

தற்போது சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாத்தில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தங்களின் துறைகள் குறித்து விவாத நேரத்தின்போது பேசுகிறார்கள். அந்த துறைகளில் உள்ள குறைகளை எடுத்துரைத்து வருகிறார்கள்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார். அப்போது சட்டசபையில் சிறப்பாக பேசிய எம்.எல்.ஏ.க்களை பாராட்டி அவர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்கியுள்ளார்.
மேலும் தன்னிடம் பாராட்டு பெற்றதை போன்று சிறப்பாக செயல்பட்டு தொகுதி மக்களிடமும் பாராட்டு பெற வேண்டும் என்று அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications