முதல்ல அந்தம்மா படத்தைப் பூரா தூக்குங்க.. விஜயகாந்த் ஆவேசம்
சென்னை: சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பளித்து விட்டது. ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களைத் தவிர வேறு யாருடைய படமும் அரசு விளம்பரங்களில் இருக்கக் கூடாது என்று. எனவே எந்தப் பதவியிலும் இல்லாத ஜெயலலிதாவின் படங்களை அரசு விளம்பரங்களிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு விளம்பரங்களில் அரசியல் ஆதாயத்துக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் படங்களை வெளியிட தடைவிதித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பொதுநலன் கருதி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
அரசு விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் ஏற்கெனவே மத்திய அரசு ஆலோசனை கேட்டபோது, தேமுதிக இந்த கருத்தை வலியுறுத்தியது. அதை இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பாகவே தந்துள்ளதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நான் வரவேற்கிறேன்.
மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து விளம்பரங்களை கண்காணிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்க பரிந்துரை செய்துள்ளது பாராட்டுக்குரியது. தமிழக அரசினுடைய அனைத்து விளம்பரங்களிலும், பத்திரிகை, தொலைக்காட்சி, திரையரங்குகளில் செய்யப்படும் விளம்பரங்களிலும் முதலமைச்சராக இல்லாமலேயே ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற்று வருகிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
தற்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவினை தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உடனடியாக அமல்படுத்தவேண்டும். கடந்த 07.01.2015 அன்று கோவையில் நடந்த தேமுதிக பொதுக்குழுவில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியும், தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதற்கு வலுசேர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications