நள்ளிரவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்... ஃபேஸ்புக்கில் படம் போட்டு குதூகலம்
சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
அரசியல் தலைவராக இல்லாமல் ஒரு குடும்பத்தலைவராக விஜயகாந்த் தனது பிறந்தநாளினை மனைவி, மகன்கள் சகிதம் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த படம் முகநூல் பக்கத்தில் வலம் வருகிறது.

முன்னதாக, இந்த ஆண்டு விஜயகாந்த் தனது பிறந்த நாளை 'பசுமை தமிழகம்' என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு கொண்டாட திட்டமிட்டிருந்தார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 264 தொகுதிகளிலும் சுமார் இரண்டரை லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகக்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. கட்சி அலுவலக வளாகத்தில் 5 மரக்கன்றுகளை நட்டு விஜயகாந்த் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இந்த விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவில் ராமாபுரம் எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளிக்கு நன்கொடையாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை விஜயகாந்த் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications