நெல்லை மாவட்டத்தில் விஜயகாந்த் இன்றும், நாளையும் தீவிர பிரச்சாரம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் இரண்டு நாள் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் சூறவாளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று திருவனந்தபுரம் வழியாக குமரி மாவட்டத்திற்கு வரும் விஜயகாந்த், தக்கலையில் நடைபெறும் கூட்டத்தில் 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் வரும் விஜயகாந்த் ராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, நெல்லை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
இன்று இரவு அவர் நெல்லையில் தங்குகிறார்.
தொடர்ந்து நாளை கடையநல்லூர், தென்காசி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடையநல்லூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அவர் ராஜபாளையம் புறப்பட்டு செல்கிறார். இந்த தகவலை மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications