வேட்புமனு தாக்கல் செய்யும்போது விஜயகாந்த் கேட்டாரே ஒரு கேள்வி! ஆடிப்போன அதிகாரி
உளுந்தூர்பேட்டை: வேட்புமனு தாக்கல் செய்யும்போதே எதற்கு உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதையொட்டி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், கட்சி நிர்வாகிகளோடு விஜயகாந்த் வருகை தந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ததும், உறுதிமொழி ஏற்பது வழக்கம். அதேபோல விஜயகாந்த்தையும் உறுதிமொழி எடுக்குமாறு, தேர்தல் அலுவலர் முகுந்தன் அறிவுறுத்தினார்.
உறுதிமொழி
இதனால் விஜயகாந்த் சற்று கோபமடைந்துவிட்டார். ''வேட்புமனு தாக்கல் செய்யும்போதே உறுதி ஏற்கச் சொல்கிறீர்கள். பின்னர் வேட்புமனு பரிசீலனையின் சிலரது மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. அல்லது சிலர் வாபஸ் பெற்று விடுகின்றனர். எனவே ஒரேடியாக வேட்புமனு பரிசீலனைக்குப்பின், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் வேட்பாளர்களிடம் உறுதி மொழி ஏற்கச் செய்யலாமே'' என்றார் விஜயகாந்த்.

கைபிசைந்த வட்டாட்சியர்
விஜயகாந்த் தனது கோரிக்கையில், நியாயம் இருப்பதாகவே கருதினார். இருப்பினும், விதிமுறைப்படி அப்படி நடைபெறுவதில்லை என்பதால், வட்டாட்சியர் கையை பிசைந்தார்.

அறிவுறுத்தல்
இதையடுத்து பிரேமலதாவும், கட்சி நிர்வாகிகளும், விதிமுறைப்படிதான் அதிகாரியால் செயல்பட முடியும். எனவே உறுதி மொழி வாசித்துவிடுங்கள் என்று அறிவுறுத்தினர்.

சலசலப்பு
இதையடுத்து விஜயகாந்த் உறுதிமொழியை வாசித்தார். இதனால் வேட்புமனு தாக்கல் செய்த இடத்தில் ஒரு சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications