பட்டு ரோஸ் ஆடைகட்டி... அசத்தலாய் 27வது திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த் பிரேமலதா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 27வது திருமண நாளினை மனைவி, மகன்கள் மச்சான் உறவுகளுடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
சென்னை: மதுரைக்காரர் விஜயகாந்துக்கு மதுரையே குலுங்க குலுங்க 1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. நேற்று அவர் தனது 27வது திருமண நாளை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
கருணாநிதி தவிர விஜயகாந்தின் மனம் கவர்ந்த தலைவர் மூப்பனார், இளையராஜா, சத்யராஜ், பிரபு, எஸ்.எஸ்.சந்திசந்திரசேகர், பாண்டியன், தியாகு, தாணு, இராம.நாராயணன், பாரதிராஜா, மணிவண்ணன், எஸ்.பி.முத்துராமன், சங்கர்கணேஷ், என திரையுலக முக்கிய பிரபலங்கள் அனைவரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

திருமண நாள் விழா
சினிமாவில் இருந்து நடிகர் சங்கத்தலைவராக உயர்ந்து அரசியல் கட்சி ஆரம்பித்து சட்டசபை எதிர்கட்சி தலைவராக உயர்ந்து இந்த 27 ஆண்டுகளில் விஜயகாந்த் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. திமுக தலைவர் கருணாநிதியை எதிர்ப்பதற்காகவே கட்சி தொடங்கினார் விஜயகாந்த். இந்த நினைவுகளை அசைபோட்டவாரே தனது 27வது திருமண நாள் விழாவை உற்சாகமாக கொண்டாடினார் விஜயகாந்த்.

ரோஸ் நிற ஆடை
ஆண்டு தோறும் ஒரே வண்ணத்தில் உடைகள் அணிந்து போட்டோவிற்கு குடும்பத்துடன் போஸ் கொடுப்பார் விஜயகாந்த். 25வது ஆண்டு திருமண நாளில் நீல கலர் ஆடை அணிந்திருந்தனர். இந்த ஆண்டு ரோஸ் நிற ஆடையை அனைவரும் அணிந்திருந்தனர்.

மனைவி, மகன்கள்
ஆண்கள் அனைவரும் ரோஸ் நிற சட்டை, ரோஸ் கரை வைத்த வேஷ்டி அணிந்திருக்க, பிரேமலதா ரோஸ் நிற பட்டுப்புடவை அணிந்து உற்சாகமாக களை கட்டியது திருமண நாள் விழா.
வாழ்த்து மழை
விஜயகாந்த் திருமண நாளை முன்னிட்டு அவரது கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். அண்ணன், அண்ணியாருக்கு திருமண நாள் வாழ்த்து கூற வயதில்லை வணங்குகிறோம் என்று பதிவிட்டு வீடியோவும் பதிவிட்டுள்ளனர்.

மகன்களுக்கு ஆசி
விஜயகாந்த் பிரேமலதா தம்பதியரின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சகாப்தம் படநாயகன் சண்முகப்பாண்டியன் ஆகியோர் தங்களின் பெற்றோரிடம் ஆசி பெற்றனர். பாசமான பெற்றோருக்கு அழகாக பரிசுப்பொருள் ஒன்றையும் அளித்தார்களாம்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications