டாஸ்மாக்கை மூடச் சொன்ன கோவனை தே. பா.சட்டத்தில் கைது செய்வதா? விஜயகாந்த் கண்டனம்
சென்னை: கோவன்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, சிறையிலிருந்து அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கொடுத்துள்ள கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தையும் அடக்குமுறையால் நசுக்கி, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல் அதிமுக ஆட்சியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களையெல்லாம், தேச துரோக குற்றச்சாட்டை சுமத்தி சிறையிலே அடைத்தது ஆங்கிலேயர் ஆட்சி. ஆனால் தற்போது அதையும் மிஞ்சும் வகையில் அதிமுக அரசின் செயல்பாடுகள் உள்ளன.
பெரும்பாலான தமிழக மக்களின் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடிய சசிபெருமாள் போராட்ட களத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளும் போராட்டம் நடத்தின.
மேலும், தமிழகம் முழுவதும் இருக்கின்ற பல்வேறு அமைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டன. மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த சிவதாஸ் (எ) கோவன் மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடியுள்ளார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மக்களிடத்தில் வரவேற்பு பெற்று விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக அரசு அவர்மீது தேச துரோக குற்றச்சாட்டையும், பிரிவினைவாத குற்றச்சாட்டையும் கூறி கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மதுவை ஒழிக்கவேண்டும் என்று ஜனநாயக ரீதியில் பிரச்சாரம் செய்ததற்கே தமிழ்நாட்டில் இந்த நிலை. தேமுதிக சார்பில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு கூட அதிமுக அரசு அனுமதி அளிக்கவில்லை. இப்படி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலில் அதிமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டால் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கொடுத்துள்ள கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தையும் அடக்குமுறையால் நசுக்கி, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல் அதிமுக ஆட்சியில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று விழிப்புணர்வு பாடல் பாடியதில் தேச துரோகமும், பிரிவினைவாதமும் எங்கிருந்து வருகிறது. இதுபோன்று மக்கள் விழிப்புணர்வுக்காகவும், நன்மைக்காகவும் செய்யப்படும் செயல்களை, அதிமுக அரசு பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் முடக்காமல், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
தமிழக அரசுக்கு மதுவை விற்பதற்கு எப்படி உரிமை உள்ளதோ, அதுபோல மதுவை வேண்டாம் என்று சொல்வதற்கு தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள மக்கள் கலை, இலக்கிய கழகத்தின் கோவன்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, சிறையிலிருந்து அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications