முதல்வர் ஜெ.வை விமர்சித்து இலங்கை இணையத்தில் கட்டுரை: விஜயகாந்த் கடும் கண்டனம்!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து இலங்கை பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் கீழ்த்தரமான கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கள இனவாத அரசான இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பான கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் அருவருக்கத்தக்க, அநாகரீகமான முறையில் புகைப்படம் ஒன்று வெளியிட்டிருப்பதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இலங்கை கடற்படை அத்துமீறி தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்கிறது. இதுகுறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். அதை கொச்சைப்படுத்தும் வகையில் இது உள்ளது.
மேலும் தமிழக முதல்வரை மட்டுமல்ல பிரதமரையும் இழிவுபடுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விசமத்தனமான தரம் தாழ்ந்து செயல்படும் விமர்சனங்களைக் கண்டு தமிழக மக்கள் கொந்தளித்துள்ளனர்.
எனவே இது போன்று எதிர்காலத்தில் இலங்கை செயல்படக் கூடாது என்று மத்திய அரசு அறிவுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசு, இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications