சசிபெருமாள் மரணம் அதிர்ச்சி தருகிறது.. விஜயகாந்த் வேதனை!
சென்னை: தமிழகத்தில் பூரண மதிவிலக்கை அமல் படுத்தக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்த காந்தியவாதி சசிபெருமாள் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, நீண்டகாலமாக தனி மனிதனாக போராடிவந்த காந்தியவாதி பெரியவர் சசிபெருமாள், கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதிமக்களுடன் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளார்.

இன்று காலை அங்குள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுவதற்கு அதிமுகஅரசு உறுதியளிக்கவேண்டும், இல்லையென்றால் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதாகக்கூறி காந்தியவாதி சசிபெருமாள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், போராட்டக்களத்திலேயே அவர் உயிரிழந்தார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காந்தியவாதி சசிபெருமாள் மறைவிற்கு இரங்கல் pic.twitter.com/T9U3snR7RG
— DMDKParty (@dmdkparty2005) July 31, 2015 அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இந்த சம்பவத்திற்கு பிறகாவது பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications