தாய்நாட்டிற்கு பெருமை தேடி தந்த சிந்துவுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.... விஜயகாந்த்
சென்னை: ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனின் "சென்னை ஸ்மாஷர்ஸ்" பேட்மிண்டன் அணியில் இடம்பெற்றிருந்தவர் பிவி சிந்து. டெல்லியில் இது தொடர்பான நிகழ்ச்சிகளில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

ஒலிம்பிக்கில் பிவி சிந்து பிரகாசித்த போது, "பிவி சிந்து எங்க சென்னை ஸ்மாஷர்ஸ் டீம்" என்று பெருமிதம் பொங்க கூறியிருந்தார் விஜயபிரபாகரன். தற்போது சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்துள்ளார்.
சிந்து பதக்கம் வென்ற விஜயகாந்த் உடனேயே தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், My hearty wishes PV Sindhu, for winning Silver medal in Rio Olympics Badminton (women's singles) . We are proud of you. ரியோ ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று நம் தாய்நாட்டிற்கு பெருமை தேடி தந்த செல்வி.PV சிந்து அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டார்.
அத்துடன் தாமும் மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் சிந்துவுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். பின்னர் மற்றொரு பதிவில் சாக்ஷி, சிந்து இருவரும் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
அதில், "மல்யுத்தப் போட்டியில் வெங்கலப்பதக்கம் வென்ற சாக்க்ஷி மாலிக், பாட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற PV சிந்து ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் விஜயகாந்த்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications