பா.ஜ.க. கூட்டணியில் இல்லை என விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை: அடம்பிடிக்கும் பொன்னார்
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறவில்லை என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் சிறிது காலம் அக்கூட்டணியில் நீடித்தது தே.மு.தி.க.
ஒருகட்டத்தில் பா.ஜ.க.வை விட்டு விலகி காங்கிரஸுடன் நெருக்கம் காட்டினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். அப்போது நான் எந்த கூட்டணியிலும் இல்லை என்று முகத்தில் அறைந்தாற் போல பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்தார்.

ஆனால் பா.ஜ.க. தலைவர்களோ விடாது கருப்பாக, தே.மு.தி.க. எங்களது கூட்டணியிலேயே நீடிக்கிறது என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் தம்மை சந்தித்த பா.ஜ.க. தலைவர்களிடமும் நான் கூட்டணியில் இருப்பதாக நீங்கள் கருதினால் எனக்கான என்ன மரியாதை கொடுத்திருக்கிறீர்கள் என எகிறியிருந்தார்.
அதன்பின்னர் நேற்று பத்திரிகையாளர்களை காறித் துப்பிய நிகழ்வின்போதும் கூட விஜயகாந்த், நாங்கள் கூட்டணியில் இருப்பதாக கூறிக் கொண்டிருப்பவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும் என்று மீண்டும் முகத்தில் அறைந்தது போல கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறவில்லை என்று விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் அநாகரிகமாக (காறித் துப்பியது) நடந்து கொண்டதை தவிர்த்திருக்க வேண்டும் என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications