இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை.. அதிமுக, திமுகவுக்கு அக்கறையே இல்லை.. கொதிக்கிறார் விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பற்றி திமுகவிற்கும் அதிமுகவிற்கும் அக்கறை இல்லை என்றும் இதுகுறித்தெல்லாம் சட்டசபையில் பேசாமல் இரு கட்சிகளும் சுய விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
- அண்மையில் கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 84 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
- ஜாதிவாரியாக பார்த்தால், தாழ்த்தப்பட்டவர்களில் 18 லட்சத்து 24 ஆயிரத்து 342 பேருக்கு வேலை இல்லை.
- அருந்ததியின மக்களில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 784 பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
- மலைவாழ் மக்களில் 63 ஆயிரத்து 898 பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
- பிற்படுத்தப்பட்டோரில் 34 லட்சத்து 53 ஆயிரத்து 868 பேருக்கு வேலை இல்லை.
- இஸ்லாமியரில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 653 பேருக்கு வேலை இல்லை.
- இதரபிரிவினரில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 821 பேரும் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
- இந்த புள்ளி விவரங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டவை.
- இதுதவிர பதிவு செய்யப்படாமல் பல லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.
- முதல்வர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியும் இளைஞர்களுக்கான எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை.
- இதனால் செயின் பறிப்பு உள்ளிட்ட கொலை கொள்ளையில் இளைஞர்கள் ஈடுபடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
- இதுகுறித்தெல்லாம் அதிமுகவும் திமுகவும் சட்டப்பேரவையில் பேசுவதில்லை.
- ஓட்டுப் போட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசாக அதிமுக அரசு அளித்துக் கொண்டிருக்கிறது.
- திமுக தினம் ஒரு பிரச்சனையை பேசி சுயவிளம்பரம் தேடிக் கொள்கிறது என்று விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications