எங்களை நீக்கும் அதிகாரம் விஜயகாந்துக்கு இல்லை: டிஸ்மிஸ் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் பேட்டி
சென்னை: எங்களை நீக்கும் அதிகாரம் விஜயகாந்திற்கு இல்லை என்று டிஸ்மிஸ் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் பார்த்திபன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, அக்கட்சியின் கொள்கை பரபரப்பு செயலாரும், எம்எல்ஏவுமான சந்திரகுமார், எம்எல்ஏ பார்த்திபன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் தேமுதிக மாநாடு, பொதுக்குழு கூட்டம் என எங்கும் கூட்டணி குறித்து அறிவிக்காமல் திடீரென ஒருநாள் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்துவிட்டதாகக் கடும் விமர்சனம் செய்தனர்.
இதுகுறித்து கூறிய சந்திரகுமார், தேமுதிக இப்போது எடுத்துள்ள முடிவு தற்கொலைக்கு சமமானது. தனது முடிவை அவர் மாற்றிக்கொண்டால்தான் தேமுதிக இயக்கத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். நாளை மதியம்வரை விஜயகாந்த்துக்கு நேரம் தருகிறோம். அதற்குள் அவர் எங்களை சந்தித்து பேசுவார் என்று நம்புகிறேன் என்று சந்திரகுமார் தெரிவித்தார்.
இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியவர்களை கட்சியில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நீக்கியுள்ளார். அந்த பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளையும் கட்சித் தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.
இதையடுத்து தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவரான எம்.எல்.ஏக்கள் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களை நீக்கும் அதிகாரம் விஜயகாந்திற்கு இல்லை பொது குழுவை கூட்டிதான் எங்களை நீக்க முடியும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் தேமுதிகவில் பிளவு ஏற்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிகவின் இரண்டாம் கட்ட தலைவரான சந்திரகுமார் தலைமையில் எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications