ஊட்டி வேட்பாளர் பெயரை உச்சரிக்கத் தடுமாறிய விஜயகாந்த்
உதகமண்டலம்: சட்டசபைத் தேர்தலில் ஊட்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை கே.கிங் நர்சிஸ்சுஸ் என்று உச்சரிக்க முடியாமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்றே தடுமாறினார். பெயரை சொல்வதில்தான் தடுமாறினாரே தவிர அவரது பிரச்சாரத்தில் அனலடிக்கத்தான் செய்தது.
ஜெயலலிதா போல மேடையில் நடந்து நடித்துக்காட்டிய விஜயகாந்தை, பொதுக்கூட்ட மேடைகளுக்கு கைதாங்கலாகவே அழைத்து வருகிறார்கள். பாதுகாவலர்கள். பிரச்சார மேடைகளில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் சரிசமமாகவே விமர்சனம் செய்து பேசுகிறார்.
உதகை, கோவை என நேற்று ஜில்லான மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தாலும் பேச்சில் வெப்பக்காற்று வீசியது என்னவோ உண்மைதான்.

வேட்பாளர்கள் அறிமுகம்
விஜயகாந்த், நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்தார்.

பெயர் வாயில் நுழையலையே
ஊட்டி வேட்பாளரின் பெயர், கே.கிங் நர்சிஸ்சுஸ் என்பதாகும். ஆனால், அந்தப்பெயரை உச்சரிக்க முடியவில்லை. இரண்டு மூன்றுமுறை முயன்றும் சரியாக உச்சரிப்பு வராததால் ஊட்டி வேட்பாளர் கிங் என சுருக்கமாக உச்சரித்து விட்டு முடித்தார்.

அடி வாங்குறது யாரு?
நல்லவேளை அந்த வேட்பாளர் தன்னுடைய முழு பெயரையும் கூறவில்லை. ஏன் வம்பு என்று நினைத்து விட்டார் போல, தான் சொன்னதைக் கேட்டு விஜயகாந்த் கோபத்தில் தலையில் கொட்டிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தே திருத்தாமல் விட்டு விட்டார் ஊட்டி வேட்பாளர்.

கொடநாடு பங்களா
ஜெயலலிதா மக்களுக்காக நான் அப்படினு சொல்றார். மக்களுக்குக்காகத்தான் நான் என்று சொல்றவர் கொடநாடு பங்களாவை மக்களுக்கு எழுதிக்கொடுப்பாரா? என்று கேட்டார்.

முட்டை ரோஸ்ட்
அடுத்து குன்னூர் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, ‘மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை ரோஸ்ட் வழங்கப்படும்' என்றொரு அறிவிப்பையும் வெளியிட்டு கைத்தட்டல் வாங்கினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications