மீண்டும் தலைவரான அமித் ஷா... வணக்கம் வைத்த விஜயகாந்த்... "வாழ்த்து" சொல்லும் செய்தி என்ன?
சென்னை: தேமுதிக வருமா என்று வழி மேல் விழி வைத்துக் காத்துள்ளன திமுகவும், பாஜகவும். மூன்றாவது அணியும் அவ்வப்போது வந்து விஜயகாந்த் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ள அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.
அத்தோடு நில்லாமல் அமித் ஷாவை பாராட்டியும் அறிக்கையில் புகழாரம் சூட்டியுள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது பாஜகவிடமிருந்து சிறப்பான "பேக்கேஜை" விஜயகாந்த் எதிர்பார்ப்பது போலத் தெரிகிறது.
இது தேர்தல் காலம். அரசியல்வாதிகள் எதைப் பேசினாலும் அது அரசியலாகவே பார்க்கப்படும் என்பதால், விஜயகாந்த்தின் வாழ்த்துச் செய்திக்குள் புதைந்திருப்பது என்ன என்ற ஆய்வில் பலரும் இறங்கியுள்ளனர்.

அமித் ஷாவின் கனவுகள் நனவாகட்டும்
விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அவரது காலத்தில் பாஜகவின் கனவுகள் நனவாகட்டும் என்று வாழ்த்தியுள்ளார் விஜயகாந்த்.

பாஜக கூட்டணியல் தேமுதிக
கடந்த சட்டசபைத் தேர்தலை அதிமுகவுடன் சேர்ந்து சந்தித்து பலம் பெற்ற தேமுதிக, அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

மீண்டும் ஒரு கூட்டணி
தற்போது மீண்டும் ஒரு கூட்டணிக்காக தேமுதிக காத்திருக்கிறது. ஆனால் யாருடன் சேரப் போகிறது என்பதுதான் தெரியவில்லை. பேரங்கள் படு ஜரூராக நடந்த வருவதாக கூறுகிறார்கள். யாரிடம் பேரம் படிகிறதோ அவர்களுடன்தான் விஜயகாந்த் கூட்டணி வைப்பார் என்று தெரிகிறது.

திமுக பக்கம் சாய்வாரா?
திமுக தரப்பில் பேரம் படு வேகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் பக்கம் நடந்து வரும் பேச்சில் சற்று முன்னேற்றம் தெரிவதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் அமித் ஷாவைப் பாராட்டுகிறாரே!
ஆனால் அமித் ஷாவை படு புகழாரமாக விஜயகாந்த் பாராட்டிப் பேசியிருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. பாஜகவிடம் நல்ல "டீலை" விஜயகாந்த் எதிர்பார்ப்பதையே இது காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பார்க்கலாம்.. யாருடைய "டீலை" விஜயகாந்த் தேர்வு செய்வார் என்பதை!
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications