மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ்... குடும்பத்தோடு அனல் பறக்கப் பிரசாரம் செய்யத் தயாராகிறார் விஜயகாந்த்
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த தெம்போடு சூறாவளி சுற்றுப்பயணத்திற்குத் தயாராகி வருகிறாராம் விஜயகாந்த். அவருடன் பிரேமலதா விஜயகாந்த்தும் 11 நகரங்களில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்தின் பிரசாரம்தான் முதலில் தொடங்குகிறதாம். பின்னர் விஜயகாந்த் இணைந்து கொள்கிறாராம். இருவரும் தனித் தனியாக பிரசாரம் செய்து 234 தொகுதிகளிலும் கவர் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.
மேலும் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷும் இந்த முறை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாராம். அவரும் ஊர் ஊராகப் போய் பேசப் போகிறாராம்.

சூறாவளி பிரசாரம்
இந்த முறை தனது பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. குறிப்பாக தனது வாக்கு வங்கி கரையவில்லை என்று காட்டியாக வேண்டிய நிலையில் உள்ளது.

லோக்சபா தேர்தலில் பேச உதவும்
இதில் தனது பலத்தையும், வாக்கு வங்கியையும் அது நிரூபித்தால்தான் லோக்சபா தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி பேசுவதற்கு உதவும் என்பதால் அதில் தேமுதிக தற்போது கவனமாக உள்ளது.

அனல் பறக்கும் பேச்சுக்கள்
இந்தப் பிரசாரத்தின்போது பிரேமலதாவின் பேச்சில் அனல் பறக்கும் என்று தெரிகிறது. ஜெயலலிதாவை அவர் அல்லி ராணி என்று ஆவேசமாக கூப்பிட்டு வருகிறார். திமுகவை தில்லு முல்லு கட்சி என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டம் வரும்
தேமுதிக தவிர மேலும் நான்கு கட்சிகள் தற்போது கூட்டணியாக இணைந்திருப்பதால் கடந்த சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை விஜயகாந்த், பிரேமலதா கூட்டங்களுக்கு நல்ல கூட்டம் வரும் என்று தெரிகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications