அமீத் ஷாவுக்கு மருத்துவமனையிலிருந்து வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்!
சென்னை: பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமீத் ஷாவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையை தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. நெஞ்சு எரிச்சல் காரணமாக மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை வந்திருப்பதால் அவர் மருத்துவமனையிலிருந்து இதை அனுப்பியிருக்கலாம் என்று தெரிகிறது.

ஆங்கிலத்தில் உள்ள அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியிருப்பதாவது...
மதிப்புக்குரிய ஐயா...
பாஜக தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அறிந்து மகிழ்ச்சியுற்றேன். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தில் உங்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது சொந்த மாநிலத்திலும், அண்டை மாநிலங்களிலும் உங்களது கட்சியை வளர்க்க நீங்கள் அரும் பணியாற்றியுள்ளீர்கள் என்பதை நான் பலமுறை கேள்விப்பட்டுள்ளேன்.
தற்போது உங்களது மதிப்புமிக்க நேரத்தையும், உழைப்பையும் உங்களது கட்சிக்கு முழுமையாக ஆற்ற, கட்சித் தலைவர் என்ற பதவி மூலம் கடவுள் உங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
தெளிவான பார்வை, ஓய்வறியாத கடும் உழைப்பு உள்ளிட்டவற்றின் மூலம் உங்களது தலைமையில், பாஜக வரலாற்றில் புதிய சகாப்தம் படைக்கப்படும என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.
நன்றி
உங்களது நம்பிக்கைக்குரிய
விஜயகாந்த்
நிறுவனர் - தலைவர்.
தேமுதிக
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications