தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா விஜயகாந்த்? டெபாசிட் போன மறுநாளே சூட்டிங்கில் பிசி
சென்னை: நேற்றுதான் தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று தனது புதிய பட வேலைகளில் பிசியாக ஆரம்பித்துள்ளார். தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் விலகி செல்கிறாரா என்று அக்கட்சி தொண்டர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக 6 சதவீத வாக்குகளை கூட பெறமுடியாமல் தோல்வியை தழுவியது. இதனால் அக்கட்சிக்கு, மாநில கட்சி என்ற அந்தஸ்து போய்விட்டது.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், 3வது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, டெபாசிட் தொகையையும் இழந்து படுதோல்வியை சந்தித்தார்.

நெக்ஸ், ரெஸ்ட்
இதையடுத்து விஜயகாந்த்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தேமுதிக தொண்டர்கள் மிகவும் பரபரப்போடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், விஜயகாந்த்தோ, சினிமா சூட்டிங்கில் பிசியாகிவிட்டார்.

புதுப்படம்
விஜயகாந்த் தற்போது 'தமிழன் என்று சொல்லடா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த பட வேலைகளில்தான் அவர் பிசியாகியுள்ளாராம்.
|
அவரே சொல்கிறார்
மேலும், பட சூட்டிங்கில் தான் பிசியாக உள்ள தகவலை தனது அதிகாரப்பூர்வ, பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் படத்தோடு தெரியப்படுத்தியுள்ளார்.
|
பல ஸ்டில்கள்
கிட்டத்தட்ட ரமணா பேராசிரியர் கெட்அப்பில் விஜயகாந்த் இருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. ஊஞ்சலில் அமர்ந்தபடியும், நாற்காலியில் அமந்தபடியும் அவர் புத்தகம் படிப்பது போன்ற ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.
|
அதிர்ச்சி
ஒரு படத்தில், சுவர் கடிகாரம் அருகே விஜயகாந்த் கை கட்டி நிற்பதை போலவும் உள்ளது. இந்த படங்களை பார்த்த அவரது கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆதங்கம்
அரசியல் வாழ்க்கையின் முக்கிய காலகட்டத்தில், விஜயகாந்த் இவ்வாறு, திரைப்பட சூட்டிங்கில் பங்கேற்றுள்ளது தேமுதிகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இத்தனை நாட்களாக தேர்தலுக்காக இரவு, பகலாக உழைத்த தங்களின் உழைப்பை ஈசியாக தலைமை எடுத்துக்கொண்டுள்ளதே என்ற ஆதங்கம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விலகுகிறாரா விஜயகாந்த்
கட்சியை மேம்படுத்துவதைவிடுத்து சூட்டிங்கில் பங்கேற்றுள்ளதை பார்க்கும்போது விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளாரோ என்று தேமுதிக தொண்டர்களை யோசிக்க செய்துள்ளது. அதேநேரம், தான் இந்த தேர்தல் முடிவால் பாதிக்கப்படவில்லை என்று மறைமுகமாக தொண்டர்களுக்கு உணர்த்தவும் இவ்வாறு படங்களை வெளியிட்டிருப்பார் என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு, விஜயகாந்த்தான் தனது கட்சியினருக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications