விஜயகாந்த்தான்.. செம டீசன்ட்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விஜயகாந்த்தான்.. செம டீசன்ட்!

    சென்னை: தான் ஒரு நடிகன். எனக்கு செல்வாக்கு உள்ளது. நான் அரசியலுக்கு வருவேன், போட்டியிடுவேன், நீ என்னை தேர்ந்தெடு என்று எகத்தாளமாக சொல்லாமல், அத்தனையையும் உதறி விட்டு வந்த ஒரே நடிகர் விஜயகாந்த்தான். அவருடைய நாகரீகம், மற்றவர்களுக்கு வருமா என்பது சந்தேகம்தான்.

    அந்த வகையில் விஜயகாந்த்தை நாம் பாராட்டியாக வேண்டும். அரசியலுக்கு வந்த பிறகு அவர் ஒரு படத்தில் நடித்தார் என்றாலும் கூட தனது சினிமா செல்வாக்கை அவர் ஒருபோதும் அரசியலுக்கு பயன்படுத்தியதில்லை என்பது கவனிப்புக்குரியது.

    சினிமாவில் நடிப்பதையும், அதில் இருப்பதையுமே ஒரு தகுதியாகக் கொண்டு அதை வைத்து தேர்தலில் போட்டியிடுவேன், மக்களுக்கு சேவை செய்வேன் என்றெல்லாம் வசனம் பேசுவோர் விஜயகாந்த்தை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பதவிகளை உதறியவர் விஜயகாந்த்

    பதவிகளை உதறியவர் விஜயகாந்த்

    விஜயகாந்த் அரசியலில் குதிப்பதற்கு முன்பு நடிகர் சங்கத்தை விட்டே விலகி் ஒதுங்கினார். பதவியை சரத்குமாரிடம் ஒப்படைத்தார். கட்சி ஆரம்பித்த பிறகு அந்தப் பக்கம் கூட அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை.

    தலைவராக இருந்தபோது அரசியல் இல்லை

    தலைவராக இருந்தபோது அரசியல் இல்லை

    அதேபோல நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தபோது அவர் அரசியல் பக்கமே திரும்பிப் பார்த்ததில்லை. அரசியல் பேசியதில்லை. அரசியல்வாதிகளுடன் நட்பு வைத்திருந்தாரே தவிர அரசியல் செய்ததில்லை.

    திரைப் புகழை தள்ளி வைத்தவர்

    திரைப் புகழை தள்ளி வைத்தவர்

    அரசியலுக்கு வந்த பிறகு அவர் திரையுலகின் ஆதரவை அவர் ஒருபோதும் நாடியதில்லை. எனக்கு ஆதரவு தாருங்கள் என்று எந்த திரை நட்சத்திரத்தின் ஆதரவையும் அவர் கேட்டதில்லை.

    சொன்னபடி செய்தவர்

    சொன்னபடி செய்தவர்

    அதேபோல நடிகராக இருந்தபோது அவர் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார். அதேசமயம், அதை சொல்லிக் கொண்டே இருக்கவில்லை. சொன்னார், சொன்னபடி வந்தார். இழுத்தடிக்கவில்லை, அதை வைத்துக் கொண்டு நீண்ட காலம் குப்பையும் கொட்டவில்லை.

    இப்பவும் இருக்காங்களே

    இப்பவும் இருக்காங்களே

    ஆனால் இப்போது திடீர் இட்லி போல சில திடீர் நடிப்பு அரசியயல்வாதிகள் புற்றீசல் போல கிளம்பிக் கொண்டே இருக்கின்றனர். நடிப்பையும், அரசியலையும், மக்கள் சேவையையும் போட்டு மிக்ஸ் செய்து மிக்சராக்கி.. கொடுமைடா சாமி. தெளிவா இருங்க, விஜயகாந்த் போல. சினிமா புகழ் என்பது உங்களது நடிப்புக்காக மக்கள் கொடுத்த ரசிப்பு. அதை முதலீடாக்கி நீங்கள் பிழைக்க மக்களை பலிகடாவாக்குவதை தவிருங்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+