உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாது தேமுதிக?
சென்னை: கட்சிக்காரர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடிக் கொண்டிருப்பதாலும், திமுக, அதிமுகவுடன் மோதி வெல்லக் கூடிய வாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்பதாலும், உள்ளாட்சித் தேர்தலை தேமுதிக புறக்கணிக்கலாம் என்று தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை தமிழக அரசியல் களத்தை தனது வாக்கு வங்கியால் மிரட்டி வந்த கட்சி தேமுதிக. ஆனால் சட்டசபைத் தேர்தல் அக்கட்சியை தடம் இல்லாமல் போகச் செய்து விட்டது. இதனால் முடங்கிப் போயுள்ளது தேமுதிக.
அக்கட்சியிலிருந்து பல முக்கியத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் விலகிப் போய் விட்டனர். திமுக, அதிமுக என மாறி மாறி சேர்ந்து வருகிறார்கள்.

பிரேமலதா - சுதீஷ்
கட்சியின் மகா மோசமான தோல்விக்கு பிரேமலதாவும், சுதீஷும்தான் காரணம் என்பது பெரும்பான்மையான தேமுதிகவினரின் எண்ணமாகும். இதை விஜயகாந்த்தைச் சந்தித்த கட்சி நிர்வாகிகளும் கூறி விட்டனர்.

மக்கள் நலக் கூட்டணி
பிரேமலதாவால்தான் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்து மோசம் போய் விட்டதாக கட்சியினர் கருதுகின்றனர். இந்த நிலையில் மீண்டும் கூட்டணியைத் தொடர மக்கள் நலக் கூட்டணி ஆர்வமாக உள்ளது. ஆனால் தேமுதிகவினர் அதற்குத் தயாராக இல்லை.

யார் செலவு செய்வது?
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும் தேமுதிகவினர் மத்தியில் ஆதரவு இல்லை. போட்டியிட்டால் செலவையும் நாம்தான் பார்த்தாக வேண்டும். போட்டியிட்டு அவமானப்படுவதை விட பேசாமல் போட்டியிடாமல் இருக்கலாம் என்று தேமுதிகவினர் கருதுகின்றனராம்.

மனச்சோர்வு
மேலும் தேர்தல் என்றாலே தேமுதிகவினர் மத்தியில் ஒரு விதமான அலர்ஜியும் வந்து விட்டது. மனச்சோர்வில் அவர்கள் உள்ளனர். போட்டியிட்டாலும் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

கட்சி கரைகிறது
மறுபக்கம் கட்சி தொடர்ந்து உடைந்து வருகிறது. பலரும் வெளியேறிய வண்ணம் உள்ளனர். இதனால் கட்சித் தலைவர் விஜயகாந்த், கட்சியைக் காக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டுள்ளார்.

புறக்கணிக்கலாம்
இந்த நிலையில் பேசாமல் தேர்தலைப் புறக்கணித்து விடலாம் என்ற மன நிலைக்கு விஜயகாந்த் வந்திருப்பதாக கூறுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் வாய்ப்புகள் குறைவு என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications