பிப். 5ம் தேதி டெல்லி செல்கிறார் விஜயகாந்த்... பாஜக தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சு!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 5-ந் தேதி டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லை என தொடர்ந்து விஜயகாந்த் கூறிவந்தார். ஆனாலும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து விஜயகாந்த்தை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
லோக்சபா தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் தேமுதிக இடம்பெறும் என்றும் பாஜக தலைவர்கள் கூறிவந்தனர்.

தேமுதிகவுக்கு 113?
இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகியவை இடம்பெறும் என செய்திகள் வெளியாகி இருந்தன. தேமுதிகவுக்கு 113, பாமகவுக்கு 70, பாஜகவுக்கு 51 என தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.

டெல்லி பயணம்
இதனை பாமக திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 5-ந் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி செல்லும் விஜயகாந்த் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கட்சிகள் அழைப்பு
தேமுதிக தங்களது கூட்டணிக்கு வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார். இதேபோல் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ உள்ளிட்டோரும் விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

நிராகரித்த கேப்டன்
ஆனால் இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார் விஜயகாந்த். இந்நிலையில் பாஜக அணியிலேயே தேமுதிக நீடிப்பதை உறுதி செய்து அறிவிக்கும் வகையில் விஜயகாந்தின் டெல்லி பயணம் அமைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications