கருணாநிதியை அடுத்த வாரம் 'அமாவாசை'நாளில் சந்திக்கிறார் விஜயகாந்த்
சென்னை: திமுக- தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அடுத்த வாரம் 8-ந் தேதியன்று அமாவாசை நாளில் சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதும் தேமுதிக வரும்... ஆனா வராது என்கிற போக்கில்தான் இருந்து வந்தது. இந்நிலையில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், விஜயகாந்த்தை நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஒப்புக் கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து திமுக- 150; தேமுதிக- 59; காங்கிரஸ் - 25 தொகுதிகளில் போட்டியிட முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதர சிறு கட்சிகளுக்கு திமுகவின் 150 தொகுதிகளில் இருந்து தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன.
ஆனால் இன்னமும் கூட்டணி உறுதியாகவில்லை; எந்த கூட்டணியிலும் தான் சேரவில்லை என்று நேற்று விஜயகாந்த் கூறியிருந்தார். அதே நேரத்தில் பாஜகவுடனான கூட்டணி குறித்து பேச சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை பகிரங்கமாக சந்திக்கவும் விஜயகாந்த் மறுத்துவிட்டார்.
மீனம்பாக்கம் அருகே தேமுதிக பிரமுகர் இல்லத்தில் விஜயகாந்த்தை ஜவடேகர் ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. திமுகவுடனான கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்தே ஜவடேகரை விஜயகாந்த் பகிரங்கமாக சந்திக்க மறுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை வரும் 8-ந் தேதியன்று அமாவாசை நாளில் நேரில் சந்தித்து திமுக- தேமுதிக கூட்டணியை விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின்னர் 'முறைப்படியான' தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications