ஈஷா யோகா பயிற்சியால் உடல் மற்றும் மன ரீதியாக புத்துணர்ச்சியடைந்துள்ளேன்: விஜயகாந்த்
கோவை: ஈஷா யோகா பயிற்சியால் உடல் மற்றும் மன ரீதியாக புத்துணர்ச்சியடைந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை வெள்ளிங்கிரி பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் ஒரு வார கால தியானத்திற்கு பின்னர் சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டபோது 28 அமைச்சர்கள் அத்தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினர். தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் 5 அமைச்சர்கள் மட்டுமே முகாமிட்டுள்ளனர். கூடுதலாக அமைச்சர்களை நியமித்திருக்கலாம்.
மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்காமல் உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் பகுதி மக்களை விரைவில் சந்திப்பேன்.
நாட்டில் சகிப்பு தன்மை குறைந்து விட்டது. அரசு அதிகாரிகளுக்கு முதலில் சகிப்பு தன்மை வரவேண்டும். மக்கள் நல கூட்டணியில் தேமுதிகவை அழைத்ததற்கு நன்றி. ஈஷா யோக மையத்தில் மேற்கொண்ட ஒரு வார யோக பயிற்சியில் உடல் மற்றும் மன ரீதியாக புத்துணர்ச்சியடைந்துள்ளதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications