விஜயகாந்த் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
விஜயகாந்த் மீதான கொலை முயற்சி வழக்கினை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை: விஜயகாந்த் மீதான கொலை முயற்சி வழக்கினை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
2013-ம் ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக ஜூலை 1ஆம் தேதி ஆஜராக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே தே.மு.தி.க. வழக்கறிஞர்களுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் ஞானசேகரன், கோட்டாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விஜயகாந்த் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, நீதிமன்ற அறைக்கள் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முதன்மை நீதிபதி, உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அறிக்கை அனுப்பியிருப்பதாகவும், ஆனால் அதில் விஜயகாந்த் மீது எந்தப் புகாரும் குறிப்பிடப்படவில்லை எனவும் கூறினார்.
எனவே, நடைபெற்ற சம்பவம் 3 நிமிடங்கள் என்பதால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இல்லை என கருத்து தெரிவித்த நீதிபதி, விஜயகாந்த் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications