விஜயகாந்த்திடமிருந்து பாசிட்டிவ் பதில் வரவில்லை: ஒப்புக்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: கூட்டணி குறித்து தே.மு.தி.க. தரப்பில் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ தகவலும் வரவில்லை என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

கூட்டணி குறித்து தே.மு.தி.க. தரப்பில் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ தகவலும் வரவில்லை. சென்னை வந்த பிரகாஷ் ஜவடேகர், விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோரை சந்தித்தாரா, இல்லையா என எனக்கு தெரியாது. டெல்லி செல்லும் நான், பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசுவேன் என்றார்.
முன்னதாக, கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, அவர், சட்டமன்ற தேர்தல் தேதி இரண்டொரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதை பா.ஜனதா அரசியலாக்க விரும்பவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்துக்கு மத்திய அரசு உரிய நேரத்தில் தகுந்த முடிவு எடுக்கும் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications