நாளை 'தாயகம்' திரும்புகிறார் விஜயகாந்த்....!
சென்னை: மகன் படப்பிடிப்பை மேற்பார்வையிடுவதற்காக மலேசியாவுக்குப் போயிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை சென்னை திரும்புகின்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்த சில நாட்களிலேயே அதாவது நவம்பர் 7ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியாவுக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்.

அவருடன் மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோரும் சென்றிருந்தனர். அவர்கள் போன பின்னர் தமிழகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள். சலசலப்புகள். இருப்பினும் விஜயகாந்த் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. 2 -3 அறிக்கைகள் மட்டும் விட்டிருந்தார்.
மாறாக தனது மகன் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தார். மலேசியாவில் 10 நாட்களுக்கு மேலாக சண்முக பாண்டியன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு படப்பிடிப்பு குழுவினர் சிங்கப்பூர் சென்றனர். அங்கும் சண்முக பாண்டியன் நடித்த காட்சிகள், பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் படப்பிடிப்பு பணிகள் நேற்று முடிவடைந்ததால் விஜயகாந்த் நாளை காலை சென்னை திரும்புவதாக தே.மு.தி.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை கூட்டம் 4 ஆம் தேதி கூடுவதால் அதில் விஜயகாந்த் பங்கேற்பார் என்றும், இதற்காக நாளை மாலை தே.மு.தி.க நிர்வாகிகளை சந்தித்து, சட்டசபையில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்க இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விஜயகாந்த் திரும்பி வருவதால் தேமுதிகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இனிமேலாவது தலைவர் பட்டையைக் கிளப்புவாரா என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
எல்லாம் சரி, சட்டசபையில் இந்த முறையும் நாக்கைத் துருத்துவாரா அல்லது நல்லபடியாக பேசுவாரா என்று தெரியலையே!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications