விஷ்ணு பக்தர் விஜயகாந்த்... ராசி நம்பர் 5 சொல்லும் ரகசியம்!
சென்னை: ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கைக் கொண்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தீவிர விஷ்ணு பக்தர். சினிமாவோ அரசியலோ தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கிய முடிவையும் குல தெய்வத்தைக் கும்பிட்டும், திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்த பின்னரும், ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் ரங்கமன்னாரை தரிசித்த பின்னர்தான் எடுப்பார்.
விஜயகாந்த்தின் ராசி எண் 5. தன்னுடைய ஒவ்வொரு செயலையும் கூட்டுத்தொகை 5 வரும் தேதிகளில் எடுப்பார். எந்த செயலாக இருந்தாலும் 5ம் எண் வரும் வகையில் அமைத்துக்கொள்வார்.
அறிவுக்கும், புத்திக்கும், செயல்திறனுக்கும் பெயர் பெற்றவர் விஷ்ணு பகவான்தான்! காக்கும் கடவுளான விஷ்ணுவின் முழுக்கடாட்சமும் பொருந்திய எண் 5. எண்களின் வரிசையில் ஒருவித காந்த சக்தி இந்த 5ம் எண் நபர்களுக்கு உண்டு! எனவேதான் இந்த எண்ணைக் காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த எண் என்கின்றனர் ஜோதிடர்கள்.

விஜயகாந்த் நம்பர் 5
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் 14. இதன் கூட்டுத்தொகை அத்தனையும் ஐந்துதான்.
2014 எம்.பி தேர்தலில் விஜயகாந்த் பிரசாரத்தைத் தொடங்கிய தேதி மார்ச் 14. முதல் கட்ட பிரசாரத்துக்கு ஒதுக்கப்பட்ட நாட்கள் 14. இதே ராசி எண் ஐந்துதான் இப்போதும் அரங்கேறியது.

தேர்தல் கூட்டணி
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி அறிவிப்பை பங்குனி உத்திர நாளான 23ம் தேதி மக்கள் நலக் கூட்டணியோடு அச்சாரம் போட்டார் விஜயகாந்த். ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு அது மீடியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது நேரம் காலை 10.40 இதன் கூட்டுத்தொகை ஐந்து.

பஞ்ச பாண்டவர்கள்
இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தேமுதிக அணியில் மொத்தம் 5 கட்சிகள் உள்ளனர். பஞ்ச பாண்டவர் அணி என்றும் பெயர் சூட்டியுள்ளனர். தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 124. இதன் கூட்டுத்தொகை 7 வருகிறது. கூட்டணியில் சேரும் பிற கட்சிகளுக்கு சில தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்து கூட்டுத்தொகை ஐந்து வருமாறு அமைத்துக்கொள்வார் விஜயகாந்த்.

5ம் எண்ணுக்கு அப்படி என்ன விஷேசம்?
எண் கணிதவியலில் உள்ள 9 எண்களிலும் 5 தான் அனைவராலும் விரும்பப்படுகிறது! காரணம் 5ம் எண்தான் மற்ற 9 எண்களுக்கும் நடுவில் உள்ளது! இந்த எண்ணே மற்ற அனைத்து மக்களையும் (எண்களையும்) ஈர்க்கும் சக்தி மிகுந்த எண்ணாகும்.

துணிச்சல்காரர்கள்
5ம் எண்ணை ராசியாக கொண்டவர்கள் எளிதில் அனைவரிடமும் நட்புக் கொண்டு விடுவார்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் இயல்பினர்.
எந்த வகையான சோதனைகளையும், சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்கள். தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். புதிய முயற்சிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்களாம்.
எப்படியோ நம்பர் 5 விஜயகாந்திற்கு இம்முறை நிஜமாகவே லக்கி நம்பராக அமைகிறதா பார்க்கலாம்!.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications