'சென்னை ஷ்மாஷர்ஸ்'... பேட்மிண்டன் அணியை வாங்கினார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்!
சென்னை: பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டன் (PBL)- சென்னை அணியை வாங்கினார் விஜய பிரபாகரன்.
பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டனுக்கான ஏலம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சென்னை அணியை நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அவர்கள் எடுத்துள்ளார்.

சென்னை ஷ்மாஷர்ஸ்
இந்த அணிக்கு சென்னை ஷ்மாஷர்ஸ் (Chennai Smashers) என்று பெயர் சூட்டியுள்ளார்.

வீரர்கள்
சென்னை அணியில் விளையாட பி.வி. சிந்து (P.V. Sindhu), சிக்கி ரெட்டி (Sikki Reddy), ஜெர்ரி சோப்ரா (Jerry Chopra), கிருஷ்ணபிரியா (Krishnapriya) ஆகிய இந்திய வீரர்களும், சோனி (Sony), சைமன்சன்டோசோ (Simonsantoso), பியா (Pia) ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிஷ்ஆட்காக் (Chrisadcock), பிரான்ஸை சேர்ந்த பிரிஷ் (Brice), கனடாவை சேர்ந்த டோபி (Toby) ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

ஜனவரி 2-ம் தேதி
இந்த பிரீமியர் லீக் பேட்மிண்டன் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியோடு வரும் ஜனவரி 2-ம் தேதி மும்பையில் ஆரம்பமாகிறது. இப்போட்டி மும்பையில் தொடங்கி சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதன் இறுதிப் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.

விஜய பிரபாகரன் பேட்டி
சென்னை அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இன்னும் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதனை விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.

50 சதவீதம் தமிழக வெள்ள நிவாரணத்துக்கு
மேலும் சென்னை ஷ்மாஷர்ஸ் அணி இந்த தொடரின் இறுதி போட்டியில் வெற்றிப் பெற்றால் அதில் 50% தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக அளிப்பேன் என்றும் அணியின் உரிமையாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications