நடப்பது தர்மயுத்தம்... மக்களே நீங்கள் யார் பக்கம்?: விஜயகாந்த்
சென்னை: நல்லவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது மக்களே நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் என்று தேமுதிக தலைவரும் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி-த.மா.கா. கூட்டணி உறுதியானதையடுத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். சென்னை தாம்பரத்தில் நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்,
இந்த சட்டசபைத் தேர்தலில் எங்கள் கூட்டணி வேண்டுமா? இல்லை திமுக, அதிமுக கூட்டணிகள் வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு எடுப்பார்கள் என்றார்.

வேலை வாய்ப்பு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்போம்.
மு.க. ஸ்டாலின் எண்ணங்களும் நோக்கங்களும் அவரை அழித்துவிடும். இந்த தேர்தலில் அனுதாபத்தை ஏற்படுத்த கருணாநிதி முயற்சி செய்கிறார்.

நல்லவர்கள் கூட்டணி
நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் உள்ளனர். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது. எங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சுதந்திரப்போர்
அன்று நடந்ததைப் போல் இன்று நடப்பதும் சுதந்திர போர்தான் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.வெள்ளையனே வெளியேறு போன்று இப்போது நடப்பது கொள்ளையனே வெளியேறு போராட்டம் என்றார் விஜயகாந்த்.

கொள்ளையடிக்கும் கும்பல்
மேலும் தமிழகத்தை கொள்ளையடிக்கும் அதிமுக ஆட்சியை எதிர்த்து தற்போது தேர்தல் போர் நடைப்பெறுகிறது. மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா கூறுவது அனைத்தும் சொத்தையும் கொள்ளையடித்து போகத்தான் அவர் கூறியுள்ளார்.

வேட்பாளர் பட்டியல்
தமது கூட்டணியில் தப்பு செய்தால் தட்டிக்கேட்க 5 பேர் உள்ளனர். தேமுதிக மற்றும் மக்கள் நலக்கூட்டனியின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படலாம் என விஜயகாந்த் கூறினார்.

ஊழல் ஆட்சி
முன்னதாக மாலையில் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் சதுக்கத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த், இன்று நாங்கள் 6 கட்சிகளும் ஒரே கொள்கைக்காக அணி சேர்ந்து உள்ளோம். கடந்த 50 வருஷமாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டு நாட்டில் ஊழல் நிறைந்து விட்டது என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications