சட்டசபை நிகழ்ச்சிகளை லைவ் செய்யும் விவகாரம்... சுப்ரீம் கோர்ட்டில் விஜயகாந்த் அப்பீல்
சென்னை: தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப அனுமதி கோரும் வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப அனுமதி கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து விஜயகாந்த் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தமது டி.வி சேனலுக்கும் அனுமதி தர கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு தாக்கல் செய்துள்ளார்.
நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரும் வழக்கில் தம்மையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப நிதி பற்றாக்குறை தான் காரணம் என தமிழக அரசு கூறுகிறது. அவை நடவடிக்கைகளை காண்பது மக்களின் ஜனநாயக உரிமை, நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications