ராசியில்லையே.... தேமுதிக தலைமை அலுவலகத்தை இடம் மாற்றும் விஜயகாந்த்?
சென்னை: தேமுதிக தலைமை அலுவலகத்தை கோயம்பேட்டில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளாராம்... தற்போது கட்சி தலைமை இருக்கும் இடத்தில் மெஹா மால் ஒன்றை கட்டுவதற்கான திட்டமும் தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலத்தின் ஒரு பகுதி மேம்பால பணிக்காக முன்னர் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு காரணமே திமுகதான் என இன்னமும் பொங்கிக் கொண்டிருக்கிறது விஜயகாந்த் குடும்பம்.

தொடரும் விமர்சனம்
இத்தனைக்கும் நிலம் எடுக்கப்பட்டதற்கு இழப்பீட்டுத் தொகையும் விஜயகாந்த் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டுவிட்டனர். ஆனால் என் கட்டிடத்தை இடித்தது திமுகதான் என இப்போதும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.

மிரட்டும் விஜயகாந்த்
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்தது. அத்துடன் தேமுதிக கட்சியும் கலகலத்துப் போன நிலையில் கட்சியையே கலைத்திடுவேன் என்றெல்லாம் நிர்வாகிகளை மிரட்டி வருகிறார் விஜயகாந்த்.

தலைமை அலுவலகம் மாற்றம்?
இதனிடையே ஜோசியத்தில் அதீத நம்பிக்கைக் கொண்ட அவர், தலைமை அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்ற ஜோதிடர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டுவிட்டாராம்.இதனால் கோயம்பேட்டில் இருந்து தேமுதிக தலைமை அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மெஹா மால்?
தற்போதைய தேமுதிக தலைமை அலுவலகம் இருக்கும் இடத்தில் மெஹா மால் ஒன்றை கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.. இதற்காக ஆந்திரா நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications