எல்லாம் "சும்மா".. இதுதான் சாதனையா "அம்மா"?.. ஜெ.வுக்கு விஜயகாந்த் கேள்வி!
சென்னை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதைத்தான் அதிமுக அரசின் சாதனை என்று கூறுகிறாரா முதல்வர் ஜெயலலிதா என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட 110 அறிக்கையில் கூறப்பட்டவை எல்லாம் வெற்று வேட்டு அறிவிப்புகள் என்றும் அவர் சாடியுள்ளார்.
விஜயகாந்த் அறிக்கை:

மக்களுக்கு ஏமாற்றம்
மாற்றம் தந்த தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. மத்திய அரசின் புள்ளியியல் துறை 2012-13 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடைசி இடத்தில்.. வேதனை, அதிர்ச்சி!
இந்த அறிக்கையின்படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்களெல்லாம். பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகின்றன.

இதுதான் சாதனையா
ஆனால் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய தமிழ்நாட்டை கடைசி இடத்திற்கு கொண்டு சென்றதுதான் ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசின் சாதனையா?

எல்லாம் சும்மா
முதலமைச்சர் ஜெயலலிதா 110விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளெல்லாம் வெற்று அறிவிப்புகள் என நிரூபணமாகிறது.

சிந்திக்காமல் செயல்பட்டால் இப்படித்தான்!
ஏழை எளிய மக்களின் வறுமையை பயன்படுத்திக்கொண்டு, கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, அதை முழுமையாக செயல்படுத்தாமலும், மக்களுக்காக வளர்ச்சி திட்டங்களைப்பற்றி சிந்திக்காமலும் செயல்பட்டதன் விளைவுதான், தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் கடைசிநிலையை நோக்கிச் சென்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய தொழில் துவங்க நம்மாநிலத்தில் உள்ளவர்களே முன்வருவார்களா என்பது சந்தேகமே!

எப்படி வருவார்கள்
மேலும் வெளிமாநிலத்திலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ, இந்தநிலையை பார்த்த பிறகு தொழிலதிபர்கள், தமிழ்நாட்டில் தொழில் துவங்க எப்படி முன்வருவார்கள்.

மறைக்க முடியாது
"முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது" என்பதுபோல தமிழகத்தின் உண்மை நிலையை மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதை, இனியும் தமிழக மக்களிடம் மறைக்க முடியாது.

இனியாவது
எனவே இனியாவது தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுத்து, பொருளாதார வளர்ச்சியில் கடைகோடியில் இருக்கும் தமிழகத்தை வளர்ச்சிபெறும் மாநிலமாக மாற்ற முன் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications