பத்திரிகைகாரங்களா நீங்க...த்தூ...செய்தியாளர்கள் முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த் -பரபரப்பு வீடியோ
சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "பத்திரிகைகாரங்களா நீங்க....தூ....... என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை இன்று விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
செய்தியாளர்களை கடுமையாக சாடிய விஜயகாந்த்...2016-ல் அதிமுக ஆட்சியை பிடிக்காது: விஜயகாந்த் பேட்டி...www.puthiyathalaimurai.tv
Posted by PuthiyaThalaimurai TV onSunday, December 27, 2015
இச்சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த விஜயகாந்த்,
2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது;
இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா?
கேட்கவே மாட்டீங்களே... பயப்படுவீங்க
பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ......... (காறி துப்புகிறார்)
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், பிரஸ் மீட் கொடுத்தா கேட்போம் என்கிறார்..
அதற்கும்,
ஆமா நீங்க கேட்பீங்க... நீங்க போய் கேளுங்க பிரஸ் மீட் கொடுங்கன்னு...கேளுங்க..
ஏன்டா உங்களை உங்களை இவ்வளவு நேர்ம நிக்க வெச்சேனே நீங்க கேளுங்க பார்ப்போம்..
உங்க மொதலாளிக சொன்னா போவீங்க... தைரியமா... இல்லைன்னா அந்த பக்கமே நீங்க போகமாட்டீங்க...
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக விஜயகாந்த் காறி துப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications