பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தை சரமாரியாக அடித்த விஜயகாந்த்- டிரைவருக்கும் உதை- மக்கள் அதிர்ச்சி
விசூர்: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்க்க சென்ற போது பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை பொதுமக்கள் முன்னிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சரமாரியாக அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமது வேனின் டிரைவரையும் விஜயகாந்த் கோபத்தில் எட்டி உதைத்தது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம், விசூர் ஆகிய இடங்களுக்கு சென்று வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அப்போது அங்கு மக்கள் கூட்ட அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து பிரச்சார வேனில் நின்றிருந்த விஜயகாந்த், வண்டியை வேகமாக எடுக்கச் சொல்லி கோபத்தில் டிரைவரை ஓங்கி உதைத்துள்ளார்.
அப்போதும் கோபம் கட்டுப்படாதவராக வேனில் தமக்கு பின்னால் நின்றிருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தின் தலையில் ஓங்கி 4 முறை சரமாரியாக அடித்தார் விஜயகாந்த். இதில் சிவகொழுந்து நிலைகுலைந்தார்.
மக்கள் முன்னிலையில் விஜயகாந்த் அந்த தொகுதி எம்.எல்.ஏ. சிவகொழுந்துவை அடித்ததால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
பொதுவாக விஜயகாந்த் பொது இடங்களில் கோபப்பட்டு கட்சியினரை அடிப்பது வழக்கமாக ஒன்றுதான்; அதேபோல் பத்திரிகையாளர்களிடம் பாயக் கூடியவர்.. ஏற்கனவே ஒருமுறை இதே சிவக்கொழுந்து, விஜயகாந்திடம் அடிவாங்கியும் இருக்கிறார்.
இந்த நிலையில் கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒரு வார காலம் கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்துக்கு சென்று யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டு நேற்றுதான் சென்னை திரும்பியிருந்தார் விஜயகாந்த்.
இந்நிலையில் மீண்டும் கோபத்துடன் கட்சி எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முன்னிலையில் கடும் கோபத்துடன் சரமாரியாகத் விஜயகாந்த் தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications