Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய பன்னீர்செல்வமா மீண்டு வரனும்.. விஜயகாந்த் மகன்கள் குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய வேண்டி அவரது மகன்கள் குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய வேண்டி அவரது மகன்கள் குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.

தேமுதிக தலைவரான விஜயகாந்த் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவர், அண்மையில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார்.

மாதக்கணக்கில் அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர் கடந்த மாதம் சென்னை திரும்பினார். விஜயகாந்த் பூரண குணம் பெற்று திரும்பியுள்ளார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை மோசமானது.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்துக்கு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மகன் வேதனை

மகன் வேதனை

மேலும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்தும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட அவரது மகன் விஜயபிரபாகரன், தனது தந்தையின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்புவது வேதனை தருவதாக கூறினார்.

குலதெய்வ கோவில்

குலதெய்வ கோவில்

இந்நிலையில் விஜயகாந்த் பூரணம் உடல்நலம் பெற வேண்டி அவரது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் குல தெய்வ கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளனர்.

மகன்கள் பூஜை

மகன்கள் பூஜை

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் பகுதியில் 'வீர சின்னம்மாள்' குலதெய்வக் கோயிலுக்கு சென்ற விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரனும், சண்முக பாண்டியனும் தந்தை விரைவில் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர்.

மேலும் சிகிச்சை

மேலும் சிகிச்சை

இதனிடையே விஜயகாந்த் மேலும் சிகிச்சை பெற விரைவில் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் விஜயகாந்த் மீண்டும் பழையபடி சிங்கம் போல் கர்ஜிக்க வேண்டும் என அவரது தொண்டர்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+