துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை: விஜயகாந்த்
சென்னை: நாட்டில் எதிரிகளை கூட நம்பலாம் அவர்கள் நம் எதிரில் இருப்பார்கள் . ஆனால், கூடவே இருந்து குழி பறிக்கும் துரோகிகளை ஒரு போதும் நம்ப முடியாது.துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலான வெளிச்சம் தொலைக்காட்சி தொடக்க விழா சென்னை அண்ணா நகரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட தேமுதிக - ம.ந.கூட்டணி- தமாகா கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

டிவி சேனலை தொடக்கி வைத்துப் பேசிய விஜயகாந்த், இருள் படிந்துள்ள தமிழகத்தில் ஒளியேற்ற இந்த வெளிச்சம் பிறந்துள்ளது. இந்த தொலைக்காட்சி வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன் என்றார்.
நாட்டில் எதிரிகளை கூட நம்பலாம். ஆனால், துரோகிகளை ஒரு போதும் நம்ப முடியாது.துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை என்றும் விஜயகாந்த் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ண பேசும் போது, ''ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தின் இன்னொரு முயற்சியாக தொலைக்காட்சியை தொடங்கியுள்ள திருமாவளவனை வாழ்த்துகிறேன்'' என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், ''எங்கள் அணி உடைந்து விடும், உடைந்து விடும் என்றார்கள். இப்போது நாங்கள் இன்னும் பலமாக உள்ளோம் என்று பேசினார்












Click it and Unblock the Notifications