மகன் பட ஷூட்டிங்.. பாரீன் போக ரெடியாகிறார் விஜயகாந்த்.. தேர்தல் முடிந்ததும் பறப்பார்?
சென்னை: மகன் பட ஷூட்டிங்குக்குப் போக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரெடியாகி வருகிறாராம். தேர்தல் முடிந்த கையோடு அவர் வெளிநாடு பறந்து விடுவாராம். அங்கு ஒரு பக்கம் ஷூட்டிங், மறுபக்கம் அவருக்கு சிகிச்சை என பிசியாகப் போகிறதாம் விஜயகாந்த் குடும்பம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உடல் நலனில் சில பிரச்சினைகள் உள்ளது. இதனால் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பும் கூட அவர் வெளிநாடு போய் சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்பினார். ஆனால் அதன் பின்னர் அவரது பேச்சும், செயலும் முற்றிலும் மாறிப் போய் விட்டது.

மேடையில் அவர் தெளிவில்லாமல் பேசுகிறார், தெளிவில்லாமல் நடந்து கொள்கிறார். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு தராமல் தொடர்ந்து அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள், தொடர்ந்து அவரை அலைய வைக்கின்றனர், பேச வைக்கின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்த கையோடு அவர் வெளிநாட்டுக்குச் சிகிச்சைக்குச் செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தனது தொண்டைக்கான சிகிச்சை, மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் ஆகியவை காரணமாக அவர் வெளிநாடு செல்லவுள்ளாராம்.
இதேபோல மேலும் சில தலைவர்களும் கூடதேர்தலுக்குப் பின்னர் பல்வேறு இடங்களுக்குப் போய் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறது. முதல்வர் ஜெயலலிதாவும் நீண்டதொரு ஓய்வுக்குத் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications