தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்பேன்... டுவிட்டரில் விஜயகாந்த்
சென்னை: தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பது என் பழக்கம்.சினிமாவில் மட்டுமல்ல, நேரிலும்.' என்று டுவிட்டர் வலைத்தளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிவிட்டுள்ளார். டுவிட்டர் சமூக வலைதளத்தில் நேற்று வாக்காளர்களுடன் உரையாடிய போது, அவரிடம் கேட்கப்பட்ட நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதிலளித்தார். உங்களுக்கு பிடித்த வில்லன் யார் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த் தனக்கு பிடித்த வில்லன் கருணாநிதி, வில்லி ஜெயலலிதா என்று தெரிவித்தார்.
.@Abdul_offl . தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பது என் பழக்கம். சினிமாவில் மட்டுமல்ல, நேரிலும்.
— Vijayakant (@iVijayakant) May 1, 2016
தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் அரசியல் களத்தில் பல்வேறு தலைவர்கள் சமூக வலைதளத்திலும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். அந்த வரிசையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் @iVijayakant என்ற முகவரியில் டுவிட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று காலை 10:30 முதல் 11:30 மணி வரை ட்விட்டர் தளத்தில் #Tweet2Vijayakant என்ற ஹெஷ்டேக்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்தார் விஜயகாந்த். ஆயிரக்கணக்கானோர் டுவிட்டர் மூலம் விஜயகாந்துடன் கலந்துரையாடினர்.
வாசகர்களின் கேள்விகணைகளும் விஜயகாந்த் பதிலும்:
|
கவலைப்பட மாட்டேன்
கேள்வி: சில ஊடகங்கள் தங்கள் மீது காட்டும் தனிப்பட்ட தாக்குதல் பற்றிய தங்களது கருத்து?
பதில்: கவலைப்படுவதில்லை

பவர் ஸ்டார்
கேள்வி : நீங்கள் ஒரு பவரான ஸ்டாராக இருந்தீர்கள். ஆனால் மக்கள் உங்களை பவர் ஸ்டாராக நினைக்கின்றார்கள்? அதற்கு காரணம் என்ன
பதில்: இப்போதும் பவரான ஸ்டாராகத்தான் இருக்கிறேன்
கேள்வி: அம்மாவோட ஆட்சியில இந்த நாடே தள்ளாடுதே அதுக்கு ஏதாச்சும் புரட்சிகரமா தீர்வு வச்சிருக்கீங்களா?
இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்.
|
நான் ஜோதிடரல்ல
எத்தனை தொகுதிகளில் ஜெயிப்பீர்கள் என்ற கேள்விக்கு நான் ஜோதிடரல்ல விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

முதல் கையெழுத்து
கேள்வி: நீங்கள் முதலமைச்சரானதும் உங்கள் முதல் கையெழுத்து என்ன?
விஜயகாந்த்: முதலமைச்சராகும் கையெழுத்து.

இளைஞர்கள் பங்களிப்பு
கேள்வி: இன்றைய அரசியலில் இளம் தலைமுறையினர் பங்களிப்பு எந்தளவுக்கு முக்கியம்?
விஜயகாந்த்: ரொம்ப முக்கியம், அவர்கள் தான் எதிர்காலம்.

ஊழலற்ற ஆட்சி
கேள்வி: மீண்டும் எதிர்க்கட்சியாக அமர்வீர்களா?
விஜயகாந்த்: இல்லை
ஒரு அரசியல்வாதியாய் திராவிட இயக்கங்ளின் ஆட்சியை அகற்ற நீங்கள் முன்னேடுக்கும் மாற்று அரசியல் என்ன?
ஊழலற்ற ஆட்சி.

ஆதரவு யாருக்கு?
கேள்வி: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், உங்கள் ஆதரவு யாருக்கு?
விஜயகாந்த்: கேள்வியை மாற்றி என்னிடம் கேட்டு விட்டீர்கள்

தொண்டையில் என்ன ஆச்சு?
உங்கள் பேச்சால் தான் உங்களுக்கு வாக்குகள் கம்மியாகும். உங்க குரலுக்கு என்னாச்சு.. ஏன் இப்படி உளறுகிறீர்கள்?
பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சித்தரிக்கின்றன
தொண்டையில் நோய் இருந்தால் உச்சரிப்புகள் புரியாமல் இருக்கும். ஆனால் உங்கள் கருத்துக்களில் கூட தெளிவு இல்லையே? ஏன்?
உங்ககிட்ட தான் தெளிவில்லை

அரசியல் தலைவர்
கேள்வி: உங்கள் மனம் கவர்ந்த அரசியல் தலைவர் யார்?
விஜயகாந்த்: எம்.ஜி.ஆர்

வில்லன்,வில்லி
கேள்வி: உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லன் யார்! ?(வைகோவைத் தவிர)
விஜயகாந்த; வைகோ ஹீரோ. வில்லன் கருணாநிதி. வில்லி ஜெயலலிதா.
|
அடுத்த படம் என்ன?
உங்களோட அடுத்த படம் என்ன? டைரக்டர் யாரு??
தமிழன் என்று சொல். டைரக்டர் அருண் பொன்னம்பலம்.
|
உரையாடியதில் சந்தோசம்
எதிர்காலம் இளைஞர்கள் கையில், வலைத்தளங்கள் வாயிலாக உங்களுடன் உரையாடியதில் சந்தோஷம் என்று பதிவிட்டுள்ளார் விஜயகாந்த்
|
அடுத்தவாரமும் தொடரும்
இந்த கேள்வி பதிலைத் தொடர்ந்து விஜயகாந்த் "எதிர்காலம் இளைஞர்கள் கையில், வலைத்தளங்கள் வாயிலாக உங்களுடன் உரையாடியதில் சந்தோஷம். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உரையாடுவேன். நேரம் மட்டும் விரைவில் சொல்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications