உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி..விருகம்பாக்கத்தில் தமிழிசைக்கு 3 வது இடம் - தந்தி டிவி
சென்னை: தேமுதிக - ம.ந.கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் தோல்வி அடைவார் எனவும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடும் விருகம்பாக்கம் தொகுதியில் அவருக்கு 3 வது இடமே கிடைக்கும் எனவும் தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுகவுக்கு 27 - 33 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுகவுக்கு 25 - 31 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம் தேமுதிகவுக்கு 24 - 30 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.

இங்கு தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக வேட்பாளர்களைவிட குறைந்த அளவிலான ஆதரவையே விஜயகாந்த் பெறுகிறார். இதனால் அவர் தோல்வி அடையும் நிலை உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
உளுந்தூர்பேட்டை தொகுதி:
அதிமுக 25 -31 %
திமுக 27 - 33 %
தேமுதிக 24 - 30 %
பாமக 11 - 17 %
பிற கட்சிகள் 1 %

அதேபோல் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு குறைவான ஆதரவே உள்ளது. இந்த தொகுதியில் திமுகவுக்கு 34 - 40 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதிமுகவுக்கு 33 - 39 சதவீத ஆதரவு காணப்படுகிறது. பாஜக 11 - 17 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம் தொகுதி:
அதிமுக 33 -39 %
திமுக 34 - 40 %
பாஜக 11 - 17 %
தேமுதிக 7 %
பிற கட்சிகள் 5 %
நோட்டா 1 %

-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications