நாக்கை துருத்தி... இவங்க எல்லாம் சொம்பைகளா? அறிவுகெட்டவனுகளா- திருமங்கலத்தில் விஜயகாந்த் பாய்ச்சல்
திருமங்கலம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் நாக்கை துருக்கி தொண்டர்களை வசைபாடுவது, மிரட்டுவது தொடர் கதையாகி வருகிறது.
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் நேற்று விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவரை பேசவிடாமல் தொண்டர்கள் கூச்சலிட்டு கொண்டே இருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் நாக்கை துருத்தியபடி ஆவேசமாக தொண்டர்களை எச்சரித்து பேசியதாவது:
யார்டா..அது.. யார்ரா... உள்ள எவன்டா கத்துறது?... சொல்லிகிட்டே இருக்கிறேன் கேட்கலை (நாக்கை துருத்தியபடி).... அறிவு....கெட்டவனுகளா
சொல்லிகிட்டே இருக்கிறேன்...கேட்கமாட்டீங்களா? இங்க இருக்கிறவனுக எல்லாம் சொம்பைகளா? சொல்லிகிட்டே இருக்கேன் கேட்கலை... உனக்கு அறிவு இல்லை...
யார்ரா அது?அறிவு இல்லை... இருக்கிற ஆளுக எல்லாம் அமைதியா இருக்காங்க இல்ல... சும்மா இருக்கனும்... அப்புறம் இவங்களை விட்டே விரட்டுங்கன்னுவ... பார்த்துக்க.. பேசாம இரு..
சொல்லிகிட்டே இருக்கேன்... விஜயகாந்த் வாழ்கங்கிறான் ஒருத்தன்... ஒருத்தன் கத்துறான்... என்னா இது?
என்றபடி விஜயகாந்த் பேச்சை தொடர தொடர்ந்து தொண்டர்கள் கூச்சல் எழுப்பினர்...இதனால் மேடையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து கையை அசைத்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.
"எல்லோருக்கும் டாடா காட்டிவிட்டேன்... இதற்கு மேல் கெஞ்ச முடியாது... வேற மாதிரிதான் நடந்து கொள்ள வேண்டியதிருக்கும்... ஜாக்கிரதையா இருங்கள்" என பேசிக் கொண்டிருந்தார். அப்போது போட்டோகிராபர் ஒருவர் விஜயகாந்தை தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்க கடுப்பாகிப் போன அவர், மைக்கை விட்டு தனியே வந்து 'நல்லா எடுங்க எனக் கூறியபடி கண் விழிகளை அகலமாக திறந்துகாட்டி இதோ எடுங்க' என்றார்.
இதனால் பொதுக்கூட்ட மேடை நகைச்சுவை அரங்கமாக மாறிப்போனது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications