தொண்டனா மட்டும் இருக்கிறோம்.. கட்சி பொறுப்பே வேண்டாம்... நிர்வாகிகளால் விஜயகாந்த் 'அப்செட்'
சென்னை: தேமுதிகவின் கடைக்கோடி தொண்டனாக மட்டுமே இருந்துவிடுகிறோம்.. எங்களை கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்து விடுங்கள் என அக்கட்சி நிர்வாகிகள் பலரும் கடிதங்களை அனுப்பி வருவதால் அவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாராம் விஜயகாந்த்.
சட்டசபை தேர்தல் படுதோல்வியுடன் தேமுதிகவுக்கு அக்கட்சி நிர்வாகிகளே முடிவுரை எழுதத் தொடங்கிவிட்டனர்... தே.மு.தி.க.வில் இருந்து பல மாவட்ட செயலாளர்கள் விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் கட்சியின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இருந்தவர்களும் கூட அடுத்தடுதது விலகினர். விஜயகாந்துக்கு அறிக்கை எழுதிக் கொடுத்த பேராசிரியர் ரவீந்தரனும் கூட வெளியேறினார்.

மா.செ.க்கள் விடுவிப்பு
இந்த நிலையில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி ஒருசில நிர்வாகிகளையும் விஜயகாந்த் நீக்கினார். ஒரு சில மாவட்ட செயலாளர்கள் உடல்நலம் கருதி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தங்களை விடுவிக்க கோரியதால் அதனை ஏற்றும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

குவியும் கடிதங்கள்....
அண்மையில் நெல்லை மாவட்ட செயலாளர் அய்யப்பெருமாள் உடல்நலம் கருதியும், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் மணிகண்டன் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களை தொடர்ந்து மேலும் சில மாவட்ட செயலாளர்கள் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கக்கோரி விஜயகாந்துக்குக் கடிதம் கொடுத்துள்ளனர்.

தொண்டராக மட்டும்...
அந்த கடிதங்களில், தங்களின் ரசிகர்களாக 25 ஆண்டுகளாக இருந்து பின்னர் கட்சியில் சேர்ந்து தங்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். குடும்ப சூழ்நிலை காரணமாக நாங்கள் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்க கேட்கிறோம். பொறுப்பில் இருந்து விடுவித்தாலும் கட்சியில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

விழிபிதுங்கும் விஜயகாந்த்
கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரி இப்படி ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில இருப்பவர்களும் கடிதங்களை தொடர்ந்து அனுப்புகின்றனர். இதனால் இவர்களையெல்லாம் எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் விஜயகாந்த் விழிபிதுங்கியிருக்கிறாராம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications