நாம் ‘ஏழைஜாதி’... பேனர் போன்ற வீண் செலவுகள் வேண்டாம் : தொண்டர்களுக்கு கேப்டன் அட்வைஸ்!
சென்னை: பணம் வந்து போகும், ஆனால் நிம்மதிதான் முக்கியம் என திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், மணமக்களை வாழ்த்திப் பேசினார். மேலும், தனக்கு விளம்பர பலகைகள் வைத்து வீண் செலவு செய்ய வேண்டாம் எனவும் இந்த விழாவில் தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தே.மு.தி.க. மருத்துவ அணி துணைச்செயலாளர் டாக்டர் முருகேஷ்-ரேகா தம்பதியின் மகள் டாக்டர் ரியா- தொழில் அதிபர் கல்யாணசுந்தரம், வசந்த தம்பதியின் மகன் டாக்டர் அரவிந்த் திருமணம் சென்னையில் இன்று நடந்தது.
நந்தம்பாக்கம் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள இ.வி.பி. ராஜேஸ்வரி மேரேஜ் பேலசில் நடந்த விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

விஜயகாந்த்தும், மனைவி பிரேமலதாவும் சேர்ந்து மங்கலநானை மணமகன் கையில் எடுத்துக்கொடுக்க, அதனை அவர் மணமகள் கழுத்தில் கட்டினார். பின்னர் மணமக்கள் விஜயகாந்த்-பிரேமலதா காலில் விழுந்து வணங்கினர். அட்சதை தூவி அவர்களை விஜயகாந்த் வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி விஜயகாந்த் பேசியதாவது :-
முதல் முறையாக இப்போதுதான் இந்த பகுதிக்கு வந்திருக்கிறேன். வழி நெடுக கட்சி தொண்டர்கள் என்னை வரவேற்று விளம்பர பலகைகள் வைத்து உள்ளனர். இது போன்ற செலவுகளையெல்லாம் செய்ய வேண்டாம் என நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். நம் தொண்டர்கள் பணக்காரர்கள் அல்ல. எல்லோரும் ஏழை எளியவர்கள்.
மணமக்கள் சிவன்-சக்தி போல வாழ வேண்டும். நீங்கள் படித்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இல்லறம் நடத்த வேண்டும். இருவருக்குமே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வர வேண்டும். அதிகம் படித்து இருக்கிறோம் என்ற எண்ணத்தில் பேசக்கூடாது. சந்தோஷமாக இல்லற வாழ்வை தொடங்கும் நீங்கள் தேவையில்லாமல் சந்தேகப்படக்கூடாது.
வாழ்க்கையில் நிம்மதி முக்கியம். காசு பணம் முக்கியமல்ல. அது வந்து போகும். ஆனால் நிம்மதி எப்போதும் குடும்பத்தில் இருக்க வேண்டும் என கூறி மனதார வாழ்த்துகிறேன்' என்றார்.
இந்தத் திருமண விழாவில் தே.மு.தி.க. இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதீஷ், எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார், நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் அனகை முருகேசன், வி.என். ராஜன், யுவராஜ், செந்தாமரைக்கண்ணன், காமராஜ், பொருளாளர் இளங்கோவன், நிர்வாகிகள் வேணுராம், ராஜேந்திரநாத், சமுத்திரபாண்டியன், கணேசன், கார்த்திக், நாகராஜ், ராமன், கே.எஸ்.மலர்மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications