"மன்னன்" ரஜினியை சமாளிக்க "சண்டிராணி" விஜயசாந்தியை களமிறக்கும் அதிமுக
மன்னன் ரஜினியை சமாளிக்க சண்டிராணி விஜயசாந்திக்கு அதிமுகவில் முக்கிய பதவியை தர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை: நடிகை விஜயசாந்தி பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசியதுதான் இப்போதைக்கு ஹாட் டாபிக். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர காய் நகர்த்தி வரும் நிலையில், அவரை சமாளிக்கும் வகையில் புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறதாம் அதிமுக அம்மா அணி. இதன் ஒரு கட்டமாகவே விஜயசாந்திக்கு முக்கிய பதவியைத் தர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு, தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோயினாக வலம் வந்தவர் விஜயசாந்தி. கடந்த 1980களில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிரடி ஆக்சன் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார். வைஜெயந்தி ஐபிஎஸ் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
தெலுங்கில் சிரஞ்சீவி, தமிழில் ரஜினி, கமலுடன் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அரசியலில் ஆர்வம் காட்டினார். தெலுங்கானாவிற்காக போராட்டம் நடத்தினால் தல்லி தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கினார்.

டெல்லிக்கு சென்ற விஜயசாந்தி
சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் இணைந்தார் விஜயசாந்தி. மேடக் தொகுதியில் இருந்து லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தனித் தெலுங்கானா அமைய வேண்டும் தீவிரமாக போராட்டங்களில் பங்கேற்றவர் விஜயசாந்தி.

தமிழக அரசியல்
சந்திரசேகர் ராவுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனாலும் பெரிய முன்னேற்றமில்லை. இப்போது தமிழக அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சசிகலா உடன் சந்திப்பு
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, அவர் முதல்வராகவேண்டும் என்று பேட்டி அளித்தார். சில தினங்களுக்கு முன்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.

டிடிவி தினகரனுடன் பேச்சு
அதைத் தொடர்ந்து சென்னை வந்த அவர் டிடிவி தினகரனுடன் நேரடியாக சந்தித்து பேசினார். டி.டி.வி. தினகரன் இல்லத்திற்கு சென்று நடிகை விஜயசாந்தி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

முக்கிய பதவி
நடிகை விஜயசாந்திக்கு அதிமுகவில் முக்கிய பதவி தரப்படலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருக்கு எதிராக குரல் கொடுக்க அதிமுகவில் சரியான ஆள் தேவைப்படுகிறது.

மன்னனை சமாளிப்பாரா?
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஹீரோயினாக நடித்த விஜயசாந்தி, அவருக்கு எதிராக அரசியல் செய்தார். பிரச்சார கூட்டங்களில் அவருக்கு எதிராக பேசியுள்ளார். தமிழ்நாட்டிலும் மன்னன் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் மன்னனை சமாளிப்பாரா சண்டிராணி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications